Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அகமதாபாத்தில் இன்று குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதல்: பைனலுக்குள் நுழையும் 2வது அணி எது?

அகமதாபாத்: 18வது சீசன் ஐபிஎல் தொடர் கிளைமாக்சை நெருங்கிவிட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், குவாலிபயர் 1ல் ஆர்சிபியிடம் தோல்வி அடைந்த நிலையில் இன்று வெற்றி முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங் 517 ரன் விளாசி உள்ளார். கேப்டன் ஸ்ரேயாஸ் (516), பிரியான்ஸ் ஆர்யா (393) ஆகியோருடன் ஜோஷ் இங்கிலிஸ், நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ் என வலுவான வரிசை உள்ளது.

பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங் (17 விக்கெட்), ஹர்பிரீத் ப்ரார், கைல் ஜேமிசன் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள யுஸ்வேந்திர சாஹல் இன்று களம் இறங்குவது கூடுதல் பலமாகும். மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் புள்ளிபட்டியலில் 4வது இடத்தை பிடித்த நிலையில் எலிமினேட்டர் போட்டியில் குஜராத்தை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. நாக்அவுட் போட்டியில் ரோகித்சர்மா (இதுவரை 410 ரன்) செலுத்துவார். பேர்ஸ்டோவ் அதிரடி தொடக்கம், சூர்யகுமார் யாதவின் சூப்பர் பார்ம்(673) பலமாக உள்ளது. பும்ரா (18 விக்கெட்), போல்ட் (21), சான்ட்னர் என அனுபவமிக்க பவுலிங் யூனிட் உள்ளது. இதற்கு முன்பு 6 முறை பைனலில் ஆடி உள்ள மும்பை 5ல் பட்டம் வென்றுள்ளது. இன்று 7வது முறையாக பைனலுக்குள் நுழையும் முனைப்பில் உள்ளது.

பஞ்சாப் இதற்கு முன் ஒரே ஒருமுறை 2014ம் ஆண்டு பைனலில் ஆடி கேகேஆரிடம் தோல்வி அடைந்துள்ளது. இன்று வெற்றிபெற்று 2வது முறையாக பைனலுக்குள் நுழையும் வேகத்தில் களம் காண்கிறது. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி பைனலில் வரும் 3ம் தேதி ஆர்சிபியுடன் பலப்பரீட்சை நடத்தும்.

அகமதாபாத்தில்....

அகமதாபாத் ஸ்டேடியத்தில் இதுவரை 42 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. முதலில் பேட் செய்த அணி, சேசிங் அணி தலா 21ல் வென்றுள்ளன. இங்கு நடப்பு சீசனில் பஞ்சாப், குஜராத்திற்கு எதிராக 243/5 ரன் குவித்தது தான் சிறந்த ஸ்கோர். குஜராத், நடப்பு சீசனில் டெல்லிக்கு எதிராக 203 ரன்னை எட்டி பிடித்ததுதான் சிறந்த சேசிங்காகும். இங்கு டாஸ் வென்ற அணி 19 (45.24%) போட்டியிலும், டாசில் தோற்ற அணி 23 போட்டியிலும் (54.76%) வென்றுள்ளன.

நேருக்கு நேர்...

இரு அணிகளும் இதற்கு முன் 32 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 17ல் மும்பை, 15ல் பஞ்சாப் வென்றுள்ளது. நடப்பு சீசனில் கடந்த 26ம் தேதி ஜெய்ப்பூரில் மோதிய போட்டியில் பஞ்சாப் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது.