Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அகமதாபாத் விமான விபத்து.. துயரத்தின் துயரம்: மஜக தலைவர் தமிமுன் அன்சாரி உருக்கம்

சென்னை: அகமதாபாத் விமான விபத்து குறித்து மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறுகையில்,

புறப்பட்ட மூன்றேநிமிடங்களில்

விமானம் விழுந்து எரிந்த காட்சிகள்

மனதில்புகை மண்டலத்தை

ஏற்படுத்தியிருக்கிறது!

அந்த விமானமே விபத்தில் இருந்ததா?

இல்லை,விபத்தில் விமானம் சிக்கியதா?

விமானத்தில் ஏற்பட்டது இயந்திர கோளரா?இயக்கியவர்களின் கோளாரா?

விவாதங்களும் வினாக்களும் காற்றில் கரைந்து

காணாமல் போன உயிர்களை திருப்பித் தரவா போகிறது?

விமானத்தை இயக்கிய எரிபொருளே, எல்லா உயிர்களையும் இலவசமாக எரித்து விட்டது.

சலவைத் துணிகளுடன்

பயணித்தவர்கள் கரிக்கட்டைகளாக

கருகிக் கிடக்கிறார்கள்

உடல்களை அடையாளம்

காண முடியவில்லை என திணறுகிறார்கள்

அடையாளம் இருந்தால்தானே அடையாளம் காண முடியும்?

சிறகுகள் அசையலாம்! முறியக் கூடாது !

பறப்பதற்குத்தான் விமானங்கள் ! பயணிப்பவர்கள்

இறப்பதற்கல்ல!

விமானம் தரையிறங்கலாம்! ஆனால் தரையையே

கொளுத்தலாமா?

தங்கள் எதிர்கால விதியை விடுதியில்

எழுதிக் கொண்டிருந்தவர்கள்

மீது இடியாய் இறங்கியது நியாயம்தானா?

பறந்து போன உயிர்களை மறந்து போக

மாதங்கள் பல ஆகலாம்.

தற்போது கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டிருக்கிறதாம்!

அது சவப்பெட்டிகளின்

எண்ணிக்கையை

குறைக்கப் போவதில்லையே..