அடையாறு மண்டலத்துகுட்பட்ட பகுதிகளில் 3 புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார் துணை மேயர் மு.மகேஷ்குமார்
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-169க்குட்பட்ட பகுதிகளில் ரூ.44.97 இலட்சம் மதிப்பில் வாசிப்பு மண்டலம், பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் மற்றும் சலவைக் கூடம் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட 3 புதிய திட்டப்பணிகளை மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார் இன்று (21.04.2025) அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
மதிப்பிற்குரிய துணை மேயர், அடையாறு மண்டலம், வார்டு-169க்குட்பட்ட வேளச்சேரி பிரதான சாலை, ஹால்டா பூங்காவில் ரூ.2.82 இலட்சம் மதிப்பில் வாசிப்பு மண்டலம் (Reading Zone), சாஸ்திரி நகர் பிரதான சாலையில் உள்ள குழந்தைகள் மையத்தின் மேல்பகுதியில் ரூ.37.50 இலட்சம் மதிப்பில் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் மற்றும் ஜோதியம்மாள் நகரில் ரூ.4.65 இலட்சம் மதிப்பில் சலவைக் கூடம் அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுகளில், மண்டல அலுவலர் பி.வி.சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


