Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நடிகை தன்ஷிகாவை கரம் பிடிக்கிறார் நடிகர் விஷால்: பரபரப்பு தகவல்

சென்னை: நடிகை சாய் தன்ஷிகாவை நடிகர் விஷால் காதல் திருமணம் செய்ய இருக்கிறார். இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பரவியுள்ளது. ‘பேராண்மை’, ‘கபாலி’, ‘பரதேசி’, ‘இருட்டு’, ‘அரவான்’ உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சாய் தன்ஷிகா. சமீபகாலமாக இவர் ஆன்மிகத்தில் கடும் நாட்டத்துடன் காணப்படுகிறார். இதனாலேயே தன்ஷிகா என்ற தனது பெயரை சாய் தன்ஷிகா என மாற்றிக் கொண்டார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் ‘விழித்திரு’ என்ற படத்தில் தன்ஷிகா நடித்தார்.

அந்த பட விழாவில் தனது பெயரை தன்ஷிகா குறிப்பிடாததால், டி.ராஜேந்தர் கடும் கோபமாகி தன்ஷிகாவை அடுக்குமொழியிலேயே திட்டினார். அப்போது தன்ஷிகா அழத் தொடங்கிவிட்டார். டி.ராஜேந்தர் காலில் விழுந்தும் அவர் தன்ஷிகாவை மன்னிக்கவில்லை. இதனால் அப்போது பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோவும் வைரலானது. இதைப் பார்த்த பிறகு தன்ஷிகாவிடம் விஷால் பேசி, அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். அப்போது முதல் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டதாம். கடந்த சிலமாதமாக இவர்கள் காதலிக்க தொடங்கியுள்ளனர்.

சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த திருநங்கைகள் அழகி போட்டியில் விஷால் பங்கேற்றார். அப்போது அவர் மயங்கி விழுந்தார். உடனே விஷாலை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவமனையில் தங்கி விஷாலை தன்ஷிகாதான் கவனித்துக் கொண்டாராம்.

இது குறித்து விஷால் தரப்பில் விசாரித்தபோது, ‘நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்ததும் திருமணம் செய்வேன் என விஷால் கூறியிருந்தார். சங்க கட்டிடம் ஆகஸ்ட் 15ம் தேதி திறக்கப்பட உள்ளது. அதற்கேற்ப ஏதேச்சையாக இந்த காதலும் கூடி வந்துவிட்டது. இன்று மாலை சாய் தன்ஷிகா தயாரித்து நடித்துள்ள யோகிடா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. அதில் விஷால் பங்கேற்கிறார்’ என்றனர். அந்த விழாவில் தனது திருமணத்தைப் பற்றி விஷால் அறிவிப்பார் எனத் தெரிகிறது.