Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அப்துல் கலாம் கல்வி உதவித்தொகை என்று பரவும் செய்தி வதந்தி - அரசின் தகவல் சரிபார்ப்பகம்

சென்னை :அப்துல் கலாம் கல்வி உதவித்தொகை என்று பரவும் செய்தி வதந்தி என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

பரவும் செய்தி

அப்துல் கலாம் பெயரில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 75% மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.10,000, 85% மேல் மதிப்பெண் பெற்ற 12ம் வகுப்பு மாணவர் களுக்கு ரூ.25,000 கல்வி உதவித்தொகை வழங்க ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

உண்மை என்ன?

இது முற்றிலும் தவறான தகவலாகும். அப்துல் கலாம் பெயரில் ஒன்றிய அரசு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக இந்த வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டே இது வதந்தி என்று ஒன்றிய அரசு விளக்கமளித்தது.