Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

2 நாட்களாக சேற்றில் சிக்கி தவித்த கன்றுக்குட்டி மீட்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள உழந்தை ஏரியில் கன்று குட்டி ஒன்று சேற்றில் சிக்கி கடந்த இரண்டு நாட்களாக வெளியே வர முடியாமல் தவித்துள்ளது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற இளைஞர்கள் சிலர், சேற்றில் சிக்கிக்கொண்ட கன்று குட்டியை பார்த்ததும் அவற்றை மீட்க முயன்றதுடன் பிராணிகள் நல ஆர்வலர் அசோக் ராஜூக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அவரது உதவியுடன் ஒரு மணி நேரமாக போராடி சேற்றில் சிக்கி இருந்த கன்று குட்டியை மீட்டு வெளியே கொண்டுவந்தனர். பின்னர் அந்த கன்றுக் குட்டிக்கு தண்ணீரும் புல்லும் கொடுத்தனர். இதன் பின்னர் சிறிது நேரத்தில் கன்று குட்டி தூரத்தில் மேய்ந்த மாட்டு மந்தையை நோக்கி ஓடியது. சேற்றில் சிக்கிய கன்று குட்டியை இளைஞர்கள் மீட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.