Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பொறுப்பு ஆளுநருக்கு ‘பொறுப்பு’ வேண்டாமா? தேச பக்தி குறித்து பாடம் எடுக்க தேவையில்லை: வன்னி அரசு விமர்சனம்

சென்னை: பொறுப்பு ஆளுநருக்கு ‘பொறுப்பு’ வேண்டாமா என்று விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரையில் நிகழ்வு ஒன்றில் பேசிய தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர், ‘‘மதுரை வைகை ஆற்றைப் பார்த்தேன். ஆறு உள்ளது, நீர் எங்கே? துப்பாக்கி எடுத்து போருக்குச் செல்வது மட்டுமல்ல, நதிகளை மீட்பதும் தேசப்பற்றுதான். வைகையை மீட்க இளைஞர்கள் முன்வர வேண்டும். வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும்’’ என்று பேசியுள்ளார்.

அதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தையும் நடத்தியுள்ளார் பொறுப்பு ஆளுநர் அர்லேகர். பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு இருக்க வேண்டாமா என்று தமிழ்நாட்டு மக்கள் கேள்வி எழுப்பும்படி அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன.

2014 முதல் 2026 வரை 26 ஆயிரம் கோடியை கொட்டிய பின்பும் கங்கை ஆற்றின் நிலை என்ன? மனித பிணங்களும், ஆலை கழிவுகளும் தானே அதன் அடையாளமாக இன்றும் உள்ளது. இதுகுறித்து வாய் திறப்பாரா பொறுப்பு ஆளுநர்? ஆளுநர் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டங்களை நடத்த முயற்சிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசை அவமதிப்பது மட்டுமல்ல; ஜனநாயகத்தையே அவமதிக்கும் போக்காகும். எல்லோரையும் நேசிக்கும் தமிழர்களுக்கு தேச பக்தி குறித்து பாடம் எடுக்க தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் வன்னியரசு, விசிக துணைப் பொதுச் செயலாளர் என இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அமைச்சர் என்பதை அவர் குறிப்பிடவில்லை.