Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி

நியூயார்க்: அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரின் மைய பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில், மினியாபோலிஸ் மாநாட்டு மையம், ஓட்டல்கள் மற்றும் ஒரு மருத்துவமனை ஆகியவை அமைந்துள்ளன.

இந்நிலையில் நேற்று மாலை 5.45 மணியளவில் திடீரென துப்பாக்கி சூடு நடந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த துப்பாக்கி சூடு பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அப்பகுதியை சுற்றி வளைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள சென்ட் தாமஸ் பல்கலைக்கழகத்தின் வளாகம் உடனடியாக மூடப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 6 பேர் காயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்களில் 2 பேர் உள்ளூர் போலீசார் என தெரியவந்து உள்ளது. தாக்குதல் நடத்திய நபரும் போலீசார் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து எப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “மினியாபோலிஸில் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து எப்.பி.ஐ தீவிரமாக கண்காணித்து வருகிறது. உள்ளூர் போலீசாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எங்களது சிறப்பு படையினர் வழங்குவார்கள்’ என குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கி சூடு நடத்திய நபரின் பின்னணி என்ன, எதற்காக தாக்குதல் நடத்தினார், அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.