Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புதுச்சேரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வாங்கி கணக்கு ஹேக்!

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லூரி வங்கி கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கிறது .வாங்கி கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள் அதிலிருந்த 8 கோடி ரூபாயை கொள்ளை அடித்துள்ளார்கள்.சுமார் 8 முதல் 8.50 ரூபாய் வரை சைபர் குற்றவாளிகள் கொள்ளையடித்துள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லூரி இங்கு 500 - க்கு மேற்பட்ட மாணவர்கள் இளநிலை ,முதுநிலை பல் மருத்துவ படிப்புகள் பயின்று வருகிறார்கள்.இதில் 200 -க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள்,நிர்வாக பணியாளர்கள் பணியாற்று வரும் நிலையில்.இந்த கல்லூரியின் சார்பாக இவர்களுக்கு இரண்டு மாத காலமாக ஊதியம் வழக்கப்படவில்லை. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் நிலுவை ஊதியத்தை உடனடியாக செலுத்த பணியாளர்கள் அரசியிடம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து இரண்டு மாதத்திற்கான ஊதியம் மற்றும் பணி தொகை சேர்த்து 8-கோடி ரூபாய் நேற்று கல்லூரிக்கு செலுத்தப்பட்டது. இந்நிலையில் வங்கி கணக்கு மருத்துவமனை நிர்வாகம் சரிபார்த்த பொது வங்கி கணக்கில் அரசு கருவூலத்தில் இருந்து அனுப்பப்பட்ட தொகை காணாமல் போனதை கண்டு நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதற்கிடையே கல்லூரியின் வங்கி கணக்கை மர்மநபர்கள் ஹேக் செய்து சுமார் 8.50 கோடி ரூபாய் இணைய குற்றவாளிகள் கொள்ளையடித்து இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லூரி நிர்வாகம் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரத்து வருகின்றனர். விசாரணையில் எச்டிஎப்சி வங்கி கணக்கில் இருந்து பாதுகாப்பு குறைபாட்டு பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் பணத்தை அபகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து வங்கி ஊழியர்களிடம் தற்போது விசாரணை நடத்திவருகின்றனர். புதுச்சேரி அரசு பல் மருத்துவமனையில் வங்கி கணக்கையே ஹேக் செய்து பணத்தை சைபர் குற்றாவாளிகள் திருடி உள்ள சம்பவம் அரசு ஊழியர்களிடம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.