Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கப்பல் கட்டும் நிறுவனத்தில் 520 அப்ரன்டிஸ்கள்

பயிற்சியின் பெயர்:

1. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: (இன்ஜினியரிங்): 110 இடங்கள். உதவித் தொகை ரூ.12,300. வயது: 01.03.2026 தேதியின்படி 18 முதல் 27க்குள். தகுதி: சிவில்/கம்ப்யூட்டர்/எலக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/ஷிப் பில்டிங் டெக்னாலஜி அல்லது இன்ஜினியரிங்/ நேவல் ஆர்க்கிடெக்சர் ஆகிய பாடங்களில் பி.இ., அல்லது பி.டெக்.,

2. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: (இன்ஜினியரிங் அல்லாதது): 60 இடங்கள். உதவித் தொகை ரூ.12,300. வயது வரம்பு: 01.03.2026 தேதியின்படி 18 முதல் 27க்குள். தகுதி: வணிகவியல்/கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்/பிசினஸ் அட்மினிஸ்டிரேஷன்/சோஷியல் வொர்க் ஆகிய பாடங்களில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. டெக்னீசியன் அப்ரன்டிஸ்: 30 இடங்கள். உதவித் தொகை: ரூ.10,900. வயது: 01.03.2026 தேதியின்படி 18 முதல் 27க்குள். தகுதி: சிவில்/கம்ப்யூட்டர்/எலக்ட்ரிக்கல்/மெக்கானிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/ஷிப் பில்டிங் டெக்னாலஜி அல்லது இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் 3 ஆண்டு டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.mazagondock.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.01.2026.

II. விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் கடற்படை கப்பல் கட்டும் தொழிற்சாலையில் ஐடிஐ படித்தவர்களுக்கு ஒரு வருட பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பயிற்சி: டிரேடு அப்ரன்டிஸ். மொத்த காலியிடங்கள்: 320.

டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம்: ( மெக்கானிக் டீசல்- 32, மிஷினிஸ்ட்-12, ஏசி மெக்கானிக்-6, பவுண்டரிமேன்-3, பிட்டர்-60, பைப் பிட்டர்-30, எலக்ட்ரீசியன்-35, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்-5, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்-17, வெல்டர் (கேஸ் மற்றும் எலக்ட்ரிக்)-20, ஷீட் மெட்டல் வொர்க்கர்-30, ஷிப்ரைட் (வுட்)-30, பெயின்டர் (ஜெனரல்)-15, மெக்கானிக் மெக்காடிரானிக்ஸ்-10, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட்-15).

வயது: 02.01.2026 தேதியின்படி 14 முதல் 18க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவுகளில் குறைந்தது 65% மதிப்பெண்களுடன் ஐடிஐ படிப்பை முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.10,560 உதவித் தொகை வழங்கப்படும்.

www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளம் மூலம் கல்வித் தகுதியை பதிவு செய்து விட்டு, அதே இணையதளத்தில் உள்ள விசாகப்பட்டினம், நேவல் டாக்யார்டு நிறுவன இணையதள முகவரியை ‘லிங்க்’ கை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.01.2026.