Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அரசு விடுதியில் மது வாங்கி கொடுத்து 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கள்ளக்காதலனுடன் பெண் தூய்மை பணியாளர் கைது

சேலம்: சேலம் அருகே அரசு பெண்கள் விடுதியில் மாணவிகளுக்கு மதுவாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த கள்ளக்காதலனுடன் பெண் தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இதில் 10ம் வகுப்பு படித்து வரும் 14 வயதான மாணவி ஒருவர், வாழப்பாடி மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தூய்மை பணியாளரான ராதிகா என்பவர் ரகுபதி என்பவரை இரவு நேரத்தில் அழைத்து வந்து தங்களுடன் பழக வைத்ததுடன், தங்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என கூறியிருந்தார்.

இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் நிர்மலா விசாரணை நடத்தினார். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அரசு விடுதியில் தூய்மை பணியாளராக புதுப்பாளையத்தை சேர்ந்த ராதிகா (42) என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ரகுபதி (35) என்பவருக்கும் இடையே தவறான உறவு இருந்துள்ளது. இரவு நேரத்தில் தூய்மை பணியாளரான ராதிகா, ரகுபதியை விடுதிக்கு வரவழைத்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்து மதுகுடித்து உல்லாசமாக இருந்து

வந்துள்ளனர். அப்போது, 14 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவிகள் 2 பேரை தூய்மை பணியாளர், அங்கு அழைத்து சென்றுள்ளார். அவர்களிடம் ஆசைவார்த்தை கூறி அவர்களுக்கும் மதுவை ஊற்றிக்கொடுத்துள்ளார். பின்னர் அந்த மாணவிகளை காட்டுப்பகுதிக்கு மிரட்டி அழைத்து சென்று ரகுபதி பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரம் கடந்த 5 மாதமாக நடந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து புகார் கொடுத்த மாணவிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் ராதிகா, அவரது தகாத உறவு காதலன் ரகுபதி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தூய்மை பணியாளர் ராதிகாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான ரகுபதி நேற்றிரவு கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.