தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பு

Advertisement

டெல்லி: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த அக்.21-ல் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமின் மறுத்த நிலையில் உச்ச நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தது. கர்நாடகாவில் வேலை கேட்டு வரும் பெண்களுக்கு கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் அளித்து வீடியோ எடுத்ததாக பிரஜ்வல் மீது வழக்கு தொடரப்பட்டது.

ஜே.டி.எஸ். கட்சி முன்னாள் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார். பிரஜ்வல் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு ஆக.24-ல் 2144 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. பிரஜ்வல் தன்னை பலாத்காரம் செய்ததாக அவரது வீட்டு பணிப்பெண் கொடுத்த புகாரில் அவர் மீது வழக்கு பதியப்பட்டது.

பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க மறுத்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் மக்களவை தேர்தல் நேரத்தின் போது கசிந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்தன.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பெலா எம் திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா அமர்வு முன்பு ரேவண்ணாவின் மனு விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீனிவாசன் மூலமாக ரேவண்ணா தமது மனுவை தாக்கல் செய்திருந்தார். மூத்த வழக்கறிஞரான முகுல் ரோகத்கி, ரேவண்ணாவின் சார்பில் வாதாடிய போது, குற்றச்சாட்டுக்கள் மிகவும் தீவிரமானவை என்றாலும், 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் சட்டப்பிரிவான ஐ.பி.சி. 376 சேர்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். தமது கட்சிக்காரர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு இந்த குற்றச்சாட்டுக்களால் தேர்தலில் தோல்வியடைந்தார் எனவும் குறிப்பிட்டார்.

"நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்த நபர்" என நீதிபதி திரிவேதி குறிப்பிட்ட நிலையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை ரோகத்கி சுட்டிக்காட்டினார். "நான் வெளிநாட்டில் இருந்தேன். திரும்ப வந்ததுமே சரணடைந்தேன். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதற்கு முன்பு எம்.பி.யாக இருந்துள்ளேன். தேர்தலில் போட்டியிட்டிருக்கிறேன். இவை அனைத்தையும் இதனால் இழந்திருக்கிறேன்" என பிரஜ்வல் தரப்பு வாதங்களை ரோகத்கி முன்வைத்தார். இருப்பினும் ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில், மனுவை டிஸ்மிஸ் செய்வதாக நீதிபதி திரிவேதி அறிவித்தார்.

 

 

 

 

 

Advertisement

Related News