Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கு: புவனகிரி, நாமக்கல்லில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான சம்பவம் தொடர்பாக, சிறுமி காணாமல் போய் இன்றுடன் 24 நாட்கள் ஆகும் நிலையில், சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கை கடந்த 14 நாட்களாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 30-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, சிறுமியைத் தேடும் பணியிலும், சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்துவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இதுவரை சிறுமி குறித்த உறுதியான தகவலோ அல்லது வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமோ கிடைக்காத நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் நாமக்கல் பகுதிகளில் சிறுமியைப் பார்த்ததாக சிபிசிஐடி போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், தற்போது அந்தப் பகுதிகளுக்குச் சென்றுள்ள சிபிசிஐடி அதிகாரிகள், சிறுமி தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஏற்கனவே சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட நபர்களிடமும் ஒருபுறம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிறுமி மாயமான வழக்கில் இதுவரை எந்தவிதமான உறுதியான தகவலும் கிடைக்காத நிலையில், புவனகிரி மற்றும் நாமக்கல் பகுதிகளில் கிடைத்துள்ள புதிய தகவல்களின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.