Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு: சாட்ஜிபிடி உதவியுடன் வெடிகுண்டு தயாரிப்பு குறித்து கற்றறிந்ததாக தகவல்!

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிகையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களைப் பயன்படுத்தியது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஜஸீர் பிலால் பானி, ராக்கெட் தயாரிப்பது எப்படி என்பது போன்ற வழிகாட்டுதல்களை சாட்ஜிபிடியின் உதவியுடன் கற்றறிந்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐ.இ.டி. எனப்படும் வெடிகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களை ஆன்லைன் தளங்கள் மூலம் அவர் வாங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், உமருன் நபி என்பவர் தனது சிறுநீரை பைகளில் சேகரித்து, அதிலிருந்து வெடிகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான யூரியாவை உற்பத்தி செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தாங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக, குற்றச்சதியில் ஈடுபட்டவர்கள் வாட்ஸ்அப் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இந்தத் தாக்குதலுக்குச் சதித்திட்டம் தீட்டியதாகவும், தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.