தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகுவதற்கு சட்டப்பூர்வமாக எந்த கட்டுப்பாடும், தடையும் இல்லை : வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ பேட்டி

Advertisement

புதுடெல்லி: செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகுவதற்கு எந்த கட்டுப்பாடும், தடையும் இல்லை என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி தற்போது வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் 471 நாட்கள் சிறை வாழ்க்கைக்கு பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உள்ளது.

இதைத் தொடர்ந்து பேட்டி அளித்த செந்தில் தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "15 மாதங்களுக்கு மேலாக வெறும் விசாரணை குற்றவாளியாக இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டுமெனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 25 லட்சம் ரூபாய்க்கான சொந்த பிணை தொகை 4 மற்றும் அதற்கு இணையான இரு பிணையதாரரின் பிணையை வழங்க வேண்டும். இன்று மாலை அல்லது நாளை காலை சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வருவார். செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகுவதற்கு எந்த கட்டுப்பாடும், தடையும் இல்லை,"இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Related News