Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரையிறுதிக்கு முன்னேறியதில் இந்தியா சாதனை

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதிய இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றதுடன் ஜோராக அரையிறுதிக்கு முன்னேறியது. கடைசி சூப்பர் 8 போட்டியில், 196 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 19.2 ஓவர்களில் சேஸ் செய்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு முன் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் 4வது அணியாக இந்தியா அந்த பட்டியலில் சேர்ந்தது.

இதன் மூலம் டி20 உலகக்கோப்பையில் அதிக முறை(6) அரையிறுதிக்கு முன்னேறிய அணிகளின் பட்டியலில் இந்தியா இணைந்ததுள்ளது. பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகளும் 6 முறை அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.