Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

செமிபைனலில் பஞ்சாப், விதர்பா

சிங்கஹள்ளி: விஜய் ஹசாரே கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் காலிறுதியில் நேற்று பஞ்சாப் - மத்தியப்பிரதேசம் அணிகள் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 345 ரன் விளாசியது. பின்னர் ஆடிய மத்தியப்பிரதேசம், 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனால், 183 ரன் வித்தியாசத்தில் வென்ற பஞ்சாப் அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு காலிறுதியில் விதர்பா-டெல்லி அணிகள் களம் கண்டன. முதலில் ஆடிய விதர்பா, 50 ஓவரில் 9 விக்கெட் இழந்து 300 ரன் குவித்தது. பின்னர் ஆடிய டெல்லி 224 ரன்னில் வீழ்ந்தது. அதனால், விதர்பா 76 ரன் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.