Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அன்பின் மகேஷ் கைதின் பொது போலீசாரை மிரட்டும் வகையில் வாக்குவாதம் என புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு சேகர்பாபு ஆஜர்!!

சென்னை: சென்னை காவல் ஆணையாளர் அலுவலகம் முன்பு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக, திமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சேகர்பாபு மற்றும் திமுக எம்பி கலாநிதி வீராசாமி மேலும் 8 பேர் மீது வேப்பேரி போலீசார் 2 பிரிவுகளின் பேரில் வழக்கு பதிவு செய்து இன்று காலை ஆஜராக வேண்டும் என்று சம்மன் வழங்கப்பட்டது.

வேப்பேரி காவல் நிலையத்தில் அவர் தற்போது, ஆஜராகி இருக்கிறார், தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்று தருவதாக குறி 400 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட, திமுக முன்னாள் அமைச்சர் அன்பின் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அன்பின் மகேஷ் கைது செய்யப்பட்டபோது முதலில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று 4 மணி நேர விசாரணைக்கு பின்பாக அன்பின் மகேஷை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதாக நினைத்த பொழுது, மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்கள். அப்போது அங்கு திரண்டு இருந்த திமுகவினரும் அவரை பின் தொடர்ந்து வந்த திமுக முன்னாள் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் எம்பி கலாநிதி விராசாமி உள்ளிட்டோர் அங்கு வருகை தந்தனர்.

அப்போது அவர்கள் அங்கு அமைத்திருந்த இரும்பு கேட்டை தாண்டி உள்ளே செல்ல முயன்றனர், அப்போது இவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தினர் இதனால், சேகர்பாபு மற்றும் எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிடோருக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இவர்கள் சிலரை மிரட்டும் வகையில் பேசிய காட்சிகள் வெளியானது, இந்த காட்சிகள் வெளியான நிலையில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது, அரசு ஊழியர்களை வேண்டும் என்றே காயப்படுத்துவது, உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்பி கலாநிதி வீராசாமி மற்றும் 8 பேர் மீது வழக்கானது பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கின் அடிப்படையில் இன்று காலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் கொடுக்கப்பட்டது, எந்த சம்மன் அடிப்படையில் முன்னாள் அமைச்சருமான சேகர்பாபு அவர்கள் வேப்பேரி காவல் நிலையத்திற்கு வருகை தந்திருக்கிறார், இன்னும் சற்று நேரத்தில் விசாரணை அதிகாரி காவல் ஆய்வாளர் முன்பாக அவர் ஆஜராகி விளக்கத்தையும் அங்கு என்ன நடந்தது என்றும் தெரிவிக்க இருக்கிறார், மேலும் இவரிடம் விசாரணை நடத்த இருக்கிறார்கள்.