Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காரில் இருந்து ரூ.1 கோடி பறிமுதல் விவகாரம் அதிமுக மாவட்ட செயலாளர் கைது: காவல் நிலையத்தை அதிமுகவினர் முற்றுகையால் விடுவிப்பு

தாராபுரம்: சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த காரை வழிமறித்து கரூர் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது காரில் ரூ.1 கோடி இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் வந்த சுப்பிரமணி என்பவரிடம் கரூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த பணம் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் செல்வகுமாரனுக்கு சொந்தமானது என்ற தகவல் கிடைத்ததாக தெரிகிறது.

இதையடுத்து கரூர் போலீசார் தாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி அதிமுக மாவட்ட செயலாளர் செல்வகுமாரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை தாராபுரம் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். இது பற்றி தகவல் அறிந்த தாராபுரம், மூலனூர், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த அதிமுகவினர் தாராபுரம் காவல் நிலையம் முன் திரண்டு மாவட்ட செயலாளரை விடுவிக்கக்கோரி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவரை போலீசார் விடுவித்தனர்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், சேலத்திலோ, கோவையிலோ யாரோ கொண்டு சென்ற பணத்திற்கு திருப்பூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர்தான் பொறுப்பு எனக் கூறி அவரை கைது செய்து அதிமுகவின் பிரசாரத்தை முடக்க நினைக்கிறார்கள். நாங்கள் நினைத்தால் முதல்வர் விஜயின் ரோடு ஷோ நடக்காமல் தடுத்துவிட முடியும் என்றார். அங்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது பிரசார வேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.