தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேவாக்போல் அபிஷேக் ஷர்மா: ஹர்பஜன் சிங் பாராட்டு

Advertisement

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் அபிஷேக் ஷர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் விளாசினார். இதன் மூலம் அபிஷேக் ஷர்மா இந்திய அணியின் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து இருக்கிறார். இந்நிலையில் அபிஷேக் ஷர்மா குறித்து மாஜி வீரர் ஹர்பஜன்சிங் கூறுகையில், ``இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் டாப் 3வது வீரராக அபிஷேக் ஷர்மா விளையாடும் காலத்தை பார்க்க மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றேன். அப்படி இருந்தால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிக பலமாக மாறிவிடும். அந்த நாள் இன்னும் வெகு தூரத்தில் இல்லை.

சேவாக் போல் விளையாடக்கூடிய ஒரு வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவை. அந்த திறன் அபிஷேக் ஷர்மாவிடம் அதிகமாக உள்ளது. எனவே விரைவில் அவரை டெஸ்ட் அணியில் நாம் பார்க்கலாம். டெஸ்ட் போட்டிகளிலும் அவர் அதிரடி காட்டுவார். தற்போது ரஞ்சி கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அவர் தான் இருக்கிறார். அவருடைய நாளாக இருந்தால் எதிரணியிடமிருந்து போட்டியை எளிதாக கவர்ந்து சென்று விடுவார். டிராவிஸ் ஹெட்டும் இதை தான் செய்து வருகிறார். சேவாக், விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற ஜாம்பவான்கள் இதை தான் செய்தார்கள். இதுபோன்ற வீரர்களால் தான் டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் சுவாரஸ்யமாக மாறும்’’ என்றார்.

Advertisement

Related News