தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீமானுக்கு வாய்கொழுப்பு அதிகமாகிவிட்டது: தமிழ்நாடு முஸ்லிம் லீக் கண்டனம்

Advertisement

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வாய்கொழுப்பு அதிகமாகிவிட்டதாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் தான் தேர்தல் வியூக நிபுணர்கள் எல்லாம் தேவைப்படுவார்கள், என த.வெ.க., தலைவர் விஜயை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பதை தமிழ்நாடு முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது. மைக் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது பேச வேண்டும் என சீமான் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறி வருகிறார். கட்சி தொடங்கிய போது பெரியாரை புகழ்ந்து பேசிய சீமான். இன்று ஆர்.எஸ்.எஸ். கைக்கூலியாக மாறி பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பேசி வருகிறார். கொள்கை நிலைப்பாடு இல்லாத சீமான் போன்றவர்கள் தமிழக அரசியலில் இருந்து விரைவில் மக்களால் விரப்பட்டுவார்கள்.

மேலும், கட்சி தொடங்கி ஒரு எம்.எல்.ஏ., ஒரு கவுன்சிலர் பதவியை கூட வெற்றி பெறமுடியாத சீமான் விஜய் குறித்து அவதூறாக பேசுவது வேடிக்கையாக உள்ளது. சீமான் அநாகரீக பேச்சு, நடவடிக்கை ஏற்று கொள்ள முடியாத நிர்வாகிகள் பலர் நாம் தமிழர் கட்சியில் இருந்து தொடர்ந்து வெளியேறி வருகிறார்கள். அதுமட்டுமல்ல, கட்சிக்கு நிதி வேண்டும் என மாவட்டந்தோறும் வசூல் செய்து அதில் வசதியாக வாழ்ந்து வரும் சீமான் பணக்கொழுப்பு விஜயை பேசுவது சீமானின் வாய்கொழுப்பு அதிகமாகி விட்டதை காட்டுகிறது. சீமான் இப்படி தொடர்ந்து பேசிவரும் ஆமைகதைகளை கேட்க தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் கிடையாது. இப்படியே சீமான் பேசி கொண்டு இருந்தால் அவரது வாய்கொழுப்புக்கு அரசியலை விட்டு விரைவில் காணாமல் போகும் காலம் வெகுதூரம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News