மதுரை: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மாஞ்சாலையில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்.
கள் என்பது உணவு, சிறந்த பானம் என மக்கள் மத்தியில் தவறான பிரசாரத்தை சீமான் மேற்கொள்கிறார். சட்டத்திற்கு புறம்பாக சீமான் கள் இறக்கி உள்ளார். சீமானின் செயல் இன்னும் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். கள் உண்பதால் வரக்கூடிய பாதிப்புகள் குறித்து திருக்குறள், சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. அரசியல் காரணத்திற்காக சீமான் கள் விவகாரத்தை கையில் எடுத்து உள்ளார்.
புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். மாநாடு நடைபெறும் தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும். 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் வெற்றி பெறும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் செயல்படவுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.


