கோவை:பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு இடைத்தேர்தல் உற்சாகத்துடன் நடக்கவில்லை. இந்த முறை வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. நோட்டாவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. பெரியாருக்கு ஓட்டு இருக்கிறதா? பெரியாரை புகழ்ந்தால் ஓட்டு வருமா? அவரை தாக்கி பேசினால் ஓட்டு மாறுமா? பெரியாரின் காலம் தாண்டி விட்டது.
பெரியாரை பிடித்தவர்களும் இருக்கிறார்கள், பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். இரண்டு பக்கமும் மக்கள் இருக்கிறார்கள். பெரியாரை பற்றிய கருத்துகளுக்கு ஓட்டை மாற்றி போட வைக்கும் சக்தி இல்லை. அதை ஈரோடு முடிவுகளும் உணர்த்தியுள்ளன. பெரியார் குறித்து சீமான் சில வாதங்களை முன்வைத்தார். அது ஓவராக போய்விட்டதோ என்பது என் கருத்து. அது ஒரு மாதிரி ஆபாசமாகவும் போய்விட்டது. பெரியாரை தாண்டி தமிழகம் பயணித்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
