மதுரை: குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளதால் சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. கூட்ட நெரிசல், வாகன நெரிசல், மருத்துவ வசதி, தீ விபத்து தடுப்பு உள்ளிட்ட அம்சங்களை இக்குழு கண்காணிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. உத்தரவை செயல்படுத்தியது குறித்து ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
