குமாரபாளையம், பள்ளிப்பாளையத்தில் சுத்திகரிப்பு செய்யாமல் சாய நீர் வெளியேற்றிய 3 ஆலைகளுக்கு சீல்வைப்பு
திருப்பூர்: குமாரபாளையம், பள்ளிப்பாளையத்தில் சுத்திகரிப்பு செய்யாமல் சாய நீர் வெளியேற்றிய 3 ஆலைகளுக்கு சீல்வைக்கப்பட்டது. சாய நீரை சுத்திகரிப்பு செய்யாமல் ஆலைகள் நேரடியாக கால்வாய் மூலம் ஆற்றில் கலந்துவிடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இரவு நேரத்தில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் குமாரபாளையத்தில் ஜெயா லுங்கி பேக்டரி, மகேஷ்குமார் டையிங் ஆலைகளுக்கு சீல்வைத்தனர். பள்ளிப்பாளையத்தில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்ட சாய்நாத் நிறுவனம் ஜென்செட் மூலம் சாயநீரை ஆற்றில் கலந்துள்ளனர்.
