Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சீலயன் 7 முதலாவது அனிவர்சரி எடிஷன் கார் அறிமுகம்!

பிஒய்டி இந்தியா நிறுவனம், சீலயன் 7 முதலாவது அனிவர்சரி எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியச் சந்தையில் கால் பதித்து ஓராண்டு நிறைவை கொண்டாடும் வகையில் இது சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிரீமியம், பர்பாமென்ஸ் என 2 வேரியண்ட்கள் உள்ளன. பிரீமியம் வேரியண்டில் 82.56 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. 100 கிலோ மீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டும். முழுமையாக சார்ஜ் செய்தால் 542 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். பிரீமியம் வேரியண்டிலும் 2.56 கிலோவாட் அவர் பேட்டரி தான் இடம் பெற்றுள்ளது.

ஆனால், இது 100 கிலோ மீட்டர் வேகத்தை 6.7 நொடிகளில் எட்டும். முழுமையாக சார்ஜ் செய்தால் 567 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம் என சோதனை ஓட்ட அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரை வடிவமைப்பை ஜெர்மனியை சேர்ந்த ஆட்டோமொபைல் வடிவமைப்பாளர் வோல்ப்கேங்க் எக்கர் உருவாக்கியுள்ளார். ஏறக்குறைய பிஒய்டியின் ஓசன் எக்ஸ் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரில் 15.6 அங்குல தொடுதிரையுடன் கூடிய சுழலும் டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. 128 வண்ண ஆம்பியன்ட் லைட்டிங், பனோரமிக் சன்ரூப், 12 ஸ்பீக்கர் டைனாடியோ சவுண்ட் சிஸ்டம், வென்டிலேட் மற்றும் ஹீட் வசதி கொண்ட சீட்கள் உட்பட பல அம்சங்கள் உள்ளன. இந்த அனிவர்சரி எடிஷனுக்கான முன்பதிவு தொடங்கி விட்டது. 1,100 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் கிடைக்கும். சீலயன் 7 கடந்த ஆண்டு நடந்த பாரத் எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.