Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

சாத்தாங்காடு பகுதியில் 21 கிலோ கஞ்சா சிக்கியது: 7 பேர் கைது

திருவொற்றியூர்: ஆவடி காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்படி, செங்குன்றம் துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில், போதை பொருட்கள் தடுப்பு தடுப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை எண்ணூர் உதவி ஆணையர் வெங்கட்குமார், சாத்தாங்காடு காவல் ஆய்வாளர் அமீர்அலி ஜின்னா தலைமையிலான தனிப்படை போலீஸ்காரர்கள் ராஜேஷ், கேசவன், ரஞ்சித் மற்றும் அன்பு உள்ளிட்டோர் அம்பேத்கர் நகர் பெரியார் திடல் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது இருவரை பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் 21 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதையடுத்து அவர்களை சாத்தாங்காடு காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

மேலும் இதுசம்பந்தமாக போலீசார் விசாரித்து ரபிராஜ் (21), ஷேக் சல்மான் (29), சுரேந்தர் (26), புருஷோத்தமன் (28), கோகுல் (21) மற்றும் 18 வயது சிறுவர்கள் 2 பேர் உள்பட 7 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சிறுவர்களை சிறுவர்களை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினர். மற்றவர்களை சிறையில் அடைத்தனர்.