பணியிடங்கள் விவரம்:
1. கல்லூரி நூலகர்: 4 இடங்கள். சம்பளம்: ரூ.57,700- ரூ.1,82,400. வயது: யுஜிசி விதிகளுக்குட்பட்டது. தகுதி: நூலக அறிவியல்/தகவல் அறிவியல் ஆகிய பாடங்களில் 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. பகுதி அலுவலர்: 1 இடம். சம்பளம்: ரூ.44,900- ரூ.1,42,400. வயது: 35க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. உதவியாளர்: 15 இடங்கள். வயது: 35க்குள். சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 1 இடம். வயது: 35க்குள். சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400. தகுதி: நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
5. அப்பர் டிவிசன் கிளார்க்: 2 இடங்கள். வயது: 32க்குள். சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் டைப்பிங் செய்யவும், கம்ப்யூட்டர் இயக்குவதில் திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
6. லோயர் டிவிசன் கிளார்க்: 20 இடங்கள். வயது: 32க்குள். சம்பளம்: ரூ.19,900- ரூ.63,200. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அறிவும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பணி எண்: 1க்கு பொது/ஒபிசியினருக்கு ரூ.3000/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.1,500/-. இதர பணிகளுக்கு பொது/ ஒபிசியினருக்கு ரூ.1000/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.https://www.sanskrit.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.03.2026.


