ஒரு ஓவரில் 11 பந்துகள் சந்தீப் சர்மா மோசமான சாதனை
Advertisement
ஐபிஎல்லில் நேற்று முன்தினம் நடந்த 32வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி 188 ரன்கள் குவித்தது. அடுத்து ஆட்டிய ராஜஸ்தான் அணியும் 20 ஓவர் முடிவில் 188 ரன் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. இதையடுத்து நடந்த சூப்பர் ஓவரில் டெல்லி அணி அசத்தல் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா 20வது ஓவரை வீசினார். அதில் 4 வைடு, ஒரு நோபால் உட்பட 11 பந்துகள் வீசி 19 ரன்களை கொடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக பந்துகளை வீசிய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனை பட்டியலில் சிராஜ், தேஷ்பாண்டே மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோருடன் முதலிடத்தை பகிர்ந்து உள்ளார்.
Advertisement