Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சமந்தா மோதிரம்!

நடிகை சமந்தா, கடந்த 1ம் தேதி வெப்தொடர் இயக்குனர் ராஜ் நிடிமோருவை ரகசிய காதல் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து அவர் வெளியிட்ட திருமண போட்டோக்கள் இணையத்தில் வைரலானது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சூழ திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்திற்கு சில எதிர்மறை விமர்சனங்களும் வெளியாகின. ஆனால் முதல் கணவர் நாக சைதன்யா அவரும் அவருக்குப் பிடித்த பெண்ணுடன் திருமணம் செய்துகொண்ட நிலையில் இதற்கு ஏன் எதிர்ப்பு என விமர்சகர்களுக்கு எதிர் கருத்தும் வைக்கப்பட்டு வருகிறது. இப்போது இந்தத் திருமண புகைப்படங்களில் சமந்தாவைத் தாண்டி பேசுப் பொருளாக மாறியிருக்கிறது அவர் அணிந்திருக்கும் திருமண மோதிரம். கோவிலில் இருவரும் மோதிரத்தை மாற்றிக்கொண்டு சமந்தா, ராஜ் நிடிமோரு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். சமந்தா அணிந்திருந்த வைர மோதிரம் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதன் விலை ஒன்றரை கோடி ரூபாய் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களையும், நெட்டிசன்களையும் வாயைப் பிளக்க வைத்திருக்கிறது. கைகளால் பிரத்யேகமாக வெட்டப்படும் மோதிரம் பொதுவாக கிரேக்க ராயல் குடும்பத்தார் அணியும் வகை நகையாகவும், அந்த டிசைனர் எவரோ தான் இந்த மோதிரத்தை டிசைன் செய்திருக்க வேண்டும் எனவும் வைரலாக தகவல்களும், ஆய்வுகளும் நடந்து வருகின்றன. இந்த வைர மோதிரம் குறைந்தது ரூ. 1.5 கோடி இருக்கலாம் என்கிறார்கள் நகை வடிவமைப்பாளர்கள். சுற்றிலும் பூ போல வெட்டப்பட்ட வைரம், நடுவிலும் இரண்டு வெட்டுகள் கொண்ட வடிவம் என வித்யாசமான டிசைனில் இந்த மோதிரம் அமைக்கப்பட்டிருக்கிறது.