Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சேலம் அருகே பெண் துண்டு துண்டாக வெட்டிக் கொ*

சேலம்: அரிசிப்பாளையத்தில் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டிக் பெண்ணை கொலை செய்து மூட்டைக்கட்டி தண்ணீர் தொட்டியில் வீசியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் அரிசிப்பாளையம் பகுதியில், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி, மூட்டையில் கட்டி, வீட்டின் மொட்டை மாடியில் உள்ள சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டுச் சென்ற கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அரிசிப்பாளையம் குணபாலன் தெருவில் உள்ள சிவன் கோயிலில் ரமேஷ் என்பவர் பூசாரியாகப் பணியாற்றி வருகிறார். அந்தத் தொன்மையான கோயிலுக்குச் சொந்தமான கட்டிடத்தில், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ரமேஷ் தன் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பிறந்தநாளையொட்டி வீட்டைப் பூட்டிவிட்டுத் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் உள்ள கோயில்களுக்குச் சென்றுவிட்டு இன்று அவர் வீடு திரும்பினார்.

வீடு திரும்பிய அவர், தண்ணீர் குழாயைத் திறந்தபோது அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர், மொட்டை மாடிக்குச் சென்று அங்கிருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது தொட்டிக்குள் மூட்டை ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த மூட்டையை அவிழ்த்துப் பார்த்தபோது, அதற்குள் மனிதக் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு உடனடியாகப் பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள இரண்டு தண்ணீர் தொட்டிகளிலும் தனித்தனியாக இரண்டு மூட்டைகள் கிடந்துள்ளன. ஒரு மூட்டையில் கை மற்றும் கால் உள்ளிட்ட உடல் பாகங்களும், மற்றொரு மூட்டையில் தலைப் பகுதியும் கண்டெடுக்கப்பட்டன. இக்கொடூரக் கொலையைச் செய்தது யார் என்பது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.