Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நிதியாண்டு தொடங்கிய 5 மாதங்களில் ரூ.55,757 கோடிக்கு பொதுத்துறை பங்குகள் விற்பனை

புதுடெல்லி: நிதியாண்டு தொடங்கிய 5 மாதங்களுக்குள், 2027-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.80,000 கோடி மதிப்பிலான பொதுத்துறை பங்குகள் விற்பனை மற்றும் சொத்து பணமாக்கல் இலக்கில் சுமார் 78 % அரசு எட்டியுள்ளது. எல்.ஐ.சி மற்றும் கோல் இந்தியா போன்ற பெரிய நிறுவனங்கள் உட்பட 9 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலமும், இந்தியன் மெடிசின்ஸ் பார்மசூட்டிகல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் விற்பனை மற்றும் எஸ்.யு.யூ.டி.ஐ-யிடமிருந்து பெறப்பட்ட பணம் ஆகியவற்றின் மூலமும் இந்த நிதியாண்டில் இதுவரை அரசு ரூ.55,757 கோடியைத் திரட்டியுள்ளது.

முதலீட்டு விலக்கல் மூலம் கிடைத்த தொகையில் பாதிக்கும் மேற்பட்டது, எல்.ஐ.சியின் 6.5 % பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்தது. இதன் மூலம் ரூ.31,515 கோடி ஈட்டப்பட்டது. மொத்தத்தில், இந்த நிதியாண்டில் இதுவரை முதலீட்டு விலக்கல் மற்றும் சொத்துக்களைப் பணமாக்குதல் வாயிலாகப் பெறப்பட்ட மூலதனம் ரூ. 62,124 கோடியாகும். இது முழு ஆண்டு பட்ஜெட் இலக்கில் சுமார் 78 % என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.