மும்பை: நடிகர் சயீஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை, போலீஸார் 35 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த சயீஃப் அலிகான், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்தி குத்து விவகாரம் தொடர்பான தச்சுத் தொழிலாளி ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். பிடிப்பட்ட நபர் கத்திக் குத்து சம்பவத்தில் தொடர்பு இல்லை என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. நடிகர் சயீஃப் அலிகானை குத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. மும்பை போலீஸார் 35 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Advertisement


