திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16ம் தேதி திறக்கப்படுகிறது. 21ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.புரட்டாசி மாத தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. பக்தர்கள் https://www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
+
Advertisement



