Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கக்கொள்ளையை அடுத்து செம்புத் தகடுகளும் திருடப்பட்டதா?.. பரபரப்பு தகவல்கள்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செம்புத் தகடுகளும் திருடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்திருப்பது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க தகடுகள் திருட்டு தொடர்பாக தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணன் போத்தி, சபரிமலை கோயில் மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரர், திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் 3 முன்னாள் தலைவர்கள், முன்னாள் உறுப்பினர்கள், மற்றும் தேவசம் வாரிய உயரதிகாரிகள், சென்னை அம்பத்தூர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் எவ்வளவு தங்கம் திருடப்பட்டது மற்றும் சபரிமலை கோயிலில் பதிக்கப்பட்டுள்ள செம்புத் தகடுகளின் பழமை ஆகியவற்றை கண்டுபிடிப்பதற்காக தங்கம் மற்றும் செம்புத் தகடுகளின் மாதிரிகள் ஜாம்ஷெட்பூரில் உள்ள உலோகவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்தப் பரிசோதனையில் செம்புத் தகடுகள் பொருத்தப்பட்டு 7 வருடங்கள் மட்டுமே ஆகியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. ஆனால் இந்த தங்கம் மற்றும் செம்புத் தகடுகள் 28 வருடங்களுக்கு முன் பொருத்தப்பட்டன.எனவே தங்கத்தைப் போலவே செம்புத் தகடுகளும் திருடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.