Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த 227 பேரில் உக்ரைன் போர்க்களத்தில் 51 இந்தியர்கள் மரணம்: எஞ்சியவர் குறித்து வெளியுறவு செயலர் விளக்கம்

பிஷ்கெக்: ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 227 இந்தியர்களில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 139 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே போர் சூழலில், ரஷ்யாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றப்பட்டு அந்நாட்டில் கூலிப்படையினராகவும், உதவியாளர்களாகவும் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்திய இளைஞர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் தொடர்ந்து வலுத்து வந்தது.

இந்த நிலையில் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது முடிவில்லா போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும், அமைதி வழியிலான தீர்வே மனிதகுலத்தின் முன்னுரிமை என்றும் பிரதமர் மோடி அவரிடம் திட்டவட்டமாக வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ‘ரஷ்ய ராணுவத்தில் 227 இந்தியர்கள் சேர்க்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் உள்ளன.

இதில் துரதிர்ஷ்டவசமாக 51 இந்தியர்கள் உயிரிழந்துவிட்டனர். அதே சமயம் இதுவரை 139 பேர் ரஷ்ய படையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய இந்தியர்களையும் உடனடியாக விடுவித்து தாயகம் அழைத்து வருவது குறித்து மாஸ்கோவில் உள்ள நமது தூதரகம் மூலம் ரஷ்ய அரசுடன் பல்வேறு மட்டங்களில் தொடர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.