பாங்காக்: அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகள் மியான்மர் மீது ஆயுத விற்பனை தடை உள்ளிட்ட தடைகளை விதித்துள்ளது. ஆனால் ரஷ்யாவும், சீனாவும் மியான்மர் ராணுவத்துக்கு பல மில்லியன் டாலர் மதிப்புள்ள உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றது. சர்வதேச அழுத்தத்தை மீறி ராணுவத்தால் நடத்தப்படும் மியான்மர் அரசிற்கு ரஷ்யா ஹெலிகாப்டர்களையும், சீனா விமானங்களையும் வழங்கி வருகின்றது. ராணுவம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ரஷ்யாவில் இருந்து 3 எம்ஐ-38டி ஹெலிகாப்டர்களும், சீனாவில் இருந்து இரண்டு ஒய்-8 விமானங்களும் வாங்கப்பட்டுள்ளதை காட்டுகின்றன. போக்குவரத்து விமானமானது மியான்மரின் வான்வெளி பாதுகாப்பை உறுதி செய்யும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
+
Advertisement
