தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரஷ்யாவை தாக்க ஏவுகணை குடுத்தா உங்களையும் தாக்குவோம்: அமெரிக்காவை மறைமுகமாக எச்சரித்த புதின்!!

Advertisement

ரஷ்யா: உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில் உக்ரைனுக்கு உதவி செய்யும் நாடுகளை தாக்குவோம் என ரஷ்ய அதிபர் புதின் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் அண்டை நாடான ரஷ்யாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உலகின் சக்தி வாய்ந்த ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது போரை தொடங்கியது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றன.

சுமார் 2 ஆண்டுகள் தாண்டியும் இந்த போர் தொடர்ந்து வரும் நிலையில் சமீபத்தில் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கி வரும் அமெரிக்கா, தொலைதூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் அமெரிக்கா அளித்து இந்த அனுமதி குறித்து மறைமுகமாக குறிப்பிட்டு பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்; ரஷ்யாவை தாக்க ஏவுகணைகள் வழங்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்.

எங்கள் நாட்டுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் ராணுவத்துக்கு எதிராக எங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த எங்களுக்கு உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். உக்ரைனின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். மேலும் இரு நாடுகளுக்கு இடையிலான போரை மேற்கத்திய நாடுகள் உலகப் போராக மாற்ற முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement