Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கிராமப்புற அரசுப் பள்ளிகளை மேம்படுத்த நாடு தழுவிய பிரச்சாரம்: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு

புதுடெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ள அபிஜித், ‘‘கடந்த 80 ஆண்டுகளில் மிக அதிகமாக புறக்கணிக்கப்பட்ட அல்லது கவனிக்கப்படாத ஒரு விஷயம் ஏதேனும் இருந்தால் அது நமது கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள் தான். நாம் புதிய நாடாளுமன்றத்தையும், பிரதமருக்கான புதிய இல்லத்தையுட் கட்டியுள்ளோம்.

ஏன் நம்மால் கிராமங்களில் புதிய பள்ளிகளை கட்ட முடியவில்லை? விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளை நாட்டின் எதிர்காலமாக நாம் கருதவில்லையா? கிராமப்புற குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு இன்றும் நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது.

குடிநீர் மற்றும் கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் பெரும்பாலும் அங்கு கிடைப்பதில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த சுதந்திர தினத்தில் நாம் எதிலாவது கவனம் செலுத்த வேண்டும் என்றால் அல்லது ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்றால் அது நமது அரசு பள்ளிகளை மேம்படுத்துவதாக தான் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்” என்றார்.