Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

45 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தியது சேலம் ஸ்பார்டன்ஸ்

சென்னை: டிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 45 ரன் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தியது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன் குவித்தது. கார்த்திக் மணிகண்டன் அதிகபட்சமாக 57 ரன் (40 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். கேப்டன் அபிஷேக் 29, பூபதி குமார் 27, எம்.ஈஸ்வரன் 26, முகமது 16 ரன் எடுத்தனர்.

திருப்பூர் பந்துவீச்சில் மதிவண்ணன் 3, சிலம்பரசன், மோகன், ராகவேந்திரா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன் மட்டுமே எடுத்து 45 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

தொடக்க வீரரும் கேப்டனுமான துஷார் ரஹேஜா அதிரடியாக 75 ரன் (43 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசிய நிலையில், மற்ற வீரர்கள் கை கொடுக்காததால் திருப்பூர் அணி மண்ணைக் கவ்வியது. சாத்விக் 16, முகமது அலி 10 ரன் எடுத்த நிலையில், மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்து ஏமாற்றமளித்தனர். சேலம் பந்துவீச்சில் ரஹில் ஷா 3, பொய்யாமொழி 2, முகமது, ஐயப்பன், விவேக் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஸ்பார்டன்ஸ் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.