Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

106 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா

விசாகப்பட்டினம், ஏப். 4: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஒய்எஸ்ஆர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த கேகேஆர் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன் குவித்தது. சால்ட் 18, நரைன் 85 ரன் (39 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்), ரகுவன்ஷி 54 ரன் (27 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), ஷ்ரேயாஸ் 18, ரிங்கு 26 ரன் (8 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ரஸ்ஸல் 41 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர்.

அடுத்து மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தாவின் பந்து வீச்சை தக்குப்பிடிக்க முடியாமல் 17.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 166 ரன்னில் சுருண்டது. இதனால், கொல்கத்தா அணி 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அரை சதம் விளாசிய கேப்டன் ரிஷப் பந்த் 55 ரன்(25 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக டிரிஸ்டன் ஸ்டப்பஸ் 54 ரன்(32 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். கொல்கத்தா பந்துவீச்சில் வைபவ் ஆரவ், வருண் சக்ரவர்த்தி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கொல்கத்தா அணி தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.