விதிகளை மீறிய கிராந்திக்கு அபராதம்
துபாய்: மகளிர் ஆசிய கோப்பை டி20 பைனலில் இலங்கை அணி தொடக்க வீராங்கனை இமேஷா துலானி அவுட்டானபோது, பெவிலியன் செல்ல இதுதான் வழி என்று சைகை காட்டிய இந்திய வேகம் கிராந்தி கவுட் மீது நடுவர்கள் புகார் செய்ததை அடுத்து, விதிமீறலில் ஈடுபட்ட கிராந்திக்கு அவரது ஊதியத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான அரையிறுதியில் குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை பூர்த்தி செய்யாமல் தாமதப்படுத்திய பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுக்கு ஊதியத்தில் 5% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement