Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரப்பர் வாரியத்தில் கள அலுவலர்

பணி: கள அலுவலர் (Field Officer): 40 இடங்கள் (பொது-27, ஒபிசி-5, எஸ்சி-2, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-4).

சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

தகுதி: வேளாண்மை பாடத்தில் பட்டப்படிப்பு அல்லது தாவரவியல் பாடத்தில் எம்எஸ்சி பட்டம்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.1000/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டியினருக்கு கட்டணம் கிடையாது.

எழுத்துத் தேர்வு கேரளாவில் திருவனந்தபுரம், கோட்டயம், திருச்சூர், கன்னூர், கர்நாடகாவில் மங்களூர், அசாமில் கவுகாத்தி (டிஸ்பூர்), திரிபுராவில் அகர்தாலா (மேற்குதிரிபுரா) ஆகிய மையங்களில் நடைபெறும்.

recruitments.rubberboard.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.03.2025.