நியூயார்க்: ஆர்எஸ்எஸ் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு அதன் தலைவர் மோகன் பகவத் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நாளை மறுதினம் புகழ்பெற்ற மேடிசன் ஸ்கொயர் கார்டனில் சுமார் 5000 இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.
நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி இந்த நிகழ்ச்சிக்கு தான் ஆதரவளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அந்த தனியார் நிகழ்ச்சியை ரத்து செய்வதற்கான அதிகாரம் நகர நிர்வாகத்துக்கு இருக்கிறதா என்பதும் சந்தேகமே என்று மம்தானி குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு பல அமைப்புகள் அரசை வலியுறுத்தி உள்ளன.



