Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் தர முயன்ற நபர் யார்?.. அதிமுக எம்பி இன்பதுரை கேள்வி

சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் தர முயன்ற நபர் யார்? என அதிமுக எம்பி இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சிய அரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக தமிழ்நாடு நாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவியை தனக்கு கொடுத்தால் 5 கோடி ரூபாய் தருகிறேன் என ஒருவர் கூறுகிறார் என லயோலா மணி வந்து தன்னிடம் வந்து கூறினார் என்றும், ஆனால் 500 கோடி ரூபாய் கொடுத்தாலும் காசு வாங்கி கொண்டு பதவி வழங்க மாட்டேன், அந்த பதவி உரிய நபருக்கு தான் வழங்கப்படும் என்று கூறினேன் என்றும் அவர் பேசினார்.

இந்நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அதிமுக எம்பி இன்பதுரை; தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற ₹5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் யார் என்பதை தவெக அமைச்சர் ராஜ்மோகன் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். லஞ்சம் கொடுக்க முயன்றவரின் அடையாளத்தை மறைப்பது குற்றம். ஆதாரங்களுடன் உண்மையை வெளிக்கொணர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதே, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 164(3)-ன் கீழ் அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்தின் உணர்வுக்கும், அமைச்சரின் பொறுப்புக்கும் ஏற்புடையதாகும்.

ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் கீழ் இப்புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.