ராயல் என்பீல்டு நிறுவனம், ஹிமாலயன் 450 மோட்டார் சைக்கிளுக்கான டியூப்லெஸ் ஸ்போக் வீல்களை அறிமுகம் செய்திருந்தது. ஏற்கெனவே ஹிமாலயன் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்கள் ஸ்போக் வீல் பொருத்திக் கொள்ளும் வகையில் ரூ.12,424க்கு இது அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இது ரூ.40,645 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஹிமாலயன் பைக் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த அளவுக்கு விலை தர வேண்டியிருக்கும். அதேநேரத்தில், ஹிமாலயன் பைக்கை ஆர்இ கான்பிகரேட்டர் மூலம் தங்களுக்காகப் பிரத்யேகமாக வடிவமைத்து வாங்குவதாக இருந்தால் டியூப்லெஸ் ஸ்போக் வீல்களுக்கு ரூ.11,000 செலுத்தினால் போதும். இந்த ஸ்போக் வீல்கள் பிளாக், பிளாக் ஆலிவ் மற்றும் கோல்ட் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கும்.
ஹிமாலயன் மோட்டார் சைக்கிள் அட்வஞ்சர் டூரர் வகையைச் சேர்ந்தது. இதில் 452 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 40 எச்பி பவரையம் 40 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஷோரூம் விலை வேரியண்ட்களுக்கு ஏற்ப சுமார் ரூ.2.85 லட்சம் முதல் ரூ.2.98 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


