Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ராயல் என்பீல்டு கொரில்லா 450 அபெக்ஸ்

ராயல் என்பீல்டு நிறுவனம், கொரில்லா 450 அபெக்ஸ் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 450 சிசி ஷெர்பா இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 40 எச்பி பவரையும் 40 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் ஸ்லிப் அசிஸ்ட் கிளட் இடம் பெற்றுள்ளது. முன்புறம் 43 மி.மீ டெலஸ்கோப்பிக் போர்க்குகள், பின்புறம் 150 எம்எம் மோனோ ஷாக் அப்சர்வர்கள் உள்ளன. இரண்டு புறமும் டிஸ்க் பிரேக்குகள், டூயல் சானல் ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. புதிய அலுமினியம் ஹாண்டில் பார் உள்ளது. ஸ்போர்ட்டியான தோற்றத்தில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. அபெக்ஸ் ரெட், அபெக்ஸ் பிளாக், அபெக்ஸ் கிரீன் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். இந்த மோட்டார் சைக்கிளில் 4 அங்குல டிஎப்டி டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. ஸ்மார்ட் போன் மூலம் இணைத்து பயன்படுத்தலாம். கூகுள் மேப் நேவிகேஷன் வசதியும் உள்ளது. இதில் ஸ்டிரீட், ஸ்போர்ட் டிரைவிங் மோட்கள் உள்ளன. புதிதாக டிரைவிங் மோட் மெமரி வசதி இடம் பெற்றுள்ளது. அதாவது, பைக்கை ஒரு டிரைவிங் மோடில் ஒட்டி நிறுத்திய பிறகு, மீண்டும் பைக்கை ஸ்டார்ட் செய்தால் அதே டிரைவிங் மோடில் தான் இயங்கும். அறிமுகச் சலுகை விலையாக துவக்க ஷோரூம் விலை சிவப்பு நிற பைக் சுமார் ரூ.2,49,194 எனவும். டாப் வேரியண்ட் பிரேவா புளூ விலை சுமார் ரூ.2,72,479 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.