ராயல் என்பீல்டு நிறுவனம், பிளையிங் ஃபிளியா சி6 என்ற எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இது இந்த நிறுவனம் சந்தைப்படுத்தியுள்ள முதல் எலெக்ட்ரிக் பைக் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 3.91 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. இதிலுள்ள பிஎம்எஸ்எம் மோட்டார் அதிகபட்சமாக 20 எச்பி பவரை வெளிப்படுத்தும். 3.7 நொடிகளில், 60 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் முழுமையாக சார்ஜ் செய்தால் 154 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். இதனுடன் வழங்கப்படும் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால், 65 நிமிடங்களில் 20 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக சார்ஜ் ஆகிவிடும் என நிறுவன தரப்பில் கூறப்பட்டுள்ளது. மிகவும் அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிளில் எல்இடி லைட்டுகள், கூகுளுடன் இணைந்த நேவிகேஷன் வசதி, வயர்லெஸ் போன் சார்ஜர், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல், ரைடிங் மோட்கள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
+


