ராயல் என்பீல்டு நிறுவனம், கடந்த ஆண்டு நடந்த மிலன் மோட்டார் கண்காட்சியில் புல்லட் 650 மோட்டார் சைக்கிளை காட்சிப்படுத்தியிருந்தது. இந்த பைக்கை தற்போது இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 648 சிசி பேரரல் டிவின், ஏர்/ ஆயில் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 47 எச்பி பவரையும், 52 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. முன்புறம் ஷோவா டெலஸ்கோப்பிக் போர்க்குகள், பின்புறம் ஷாக் அப்சர்வர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பைக் கெனான் பிளாக் மற்றும் பேட்டில்ஷிப் புளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.3.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement
