Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பாறைகள் தகர்ப்பு ஊட்டி மலை ரயில் 2வது நாளாக ரத்து

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் பாதையில் ஹில்குரோவ்- ரன்னிமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் திடீரென மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பெரிய பாறைகற்கள் உருண்டு விழுந்தன. இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை புறப்பட்ட மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் ரயில்வே தொழிலாளர்கள் சென்று ராட்சத பாறையை கம்ப்ரஸர் மூலம் துளையிட்டு வெடி வைத்து தகர்த்தனர். இதனால், 2ம் நாளாக நேற்றும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.